அபராதமா? நெய்யா?
துர்நாற்றம் வீசும், உடல்நலத்தைக் கெடுக்கும் கலப்பட நெய்யை விற்றதற்காக ஒரு வியாபாரி ஒருமுறை நீதிபதியின் முன் இழுத்துச் செல்லப்பட்டார். நெய் முழுவதையும் அவரே குடிக்க வேண்டும் அல்லது 23 கசையடிகளைப் பெற வேண்டும் அல்லது 100 பொற்காசுகள் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர் நெய்யைக் குடிக்க எண்ணி, அதைக் குடிக்கத் தொடங்கினார். ஆனால் நாற்றம் தாங்க முடியவில்லை.

சவுக்கடியே பரவாயில்லை என்று அதைத் தேர்ந்தெடுத்தார். சுமார் ஒரு டஜன் அடிகளுக்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை. எனவே, அபராதம் கட்டிவிடுகிறேன், என்னை விடுவியுங்கள் என்று நீதிபதியிடம் கூறினார். அவர் முதலிலேயே அதைத் தேர்ந்தெடுத்திருந்தால், துர்நாற்றம் வீசும் நெய்யைக் குடிப்பதையும், கசையடியின் வேதனையையும் தவிர்த்திருக்க முடியும். தீர்மானிக்க இயலாத காரணத்தால் அவர் துர்நாற்றத்தையும், அடிகளையும் சுவைக்க வேண்டியதாயிற்று.

நன்றி: சனாதன சாரதி, டிசம்பர் 2024

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

© TamilOnline.com