Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Gomes Barathi G (United States)

Comments Home
Comments by Gomes Barathi G (3)
Article: திரு. ராம் துக்காராம்
Category: நேர்காணல் (Sep 2014) Posted On: Sep 09, 2014
கடந்த செப்டம்பர் தென்றல் இதழில் பதிவுற்ற ராம் துக்காராம் மற்றும் ராஜ் குமார் பாரதி இருவரின் நேர்காணல் இரண்டும் என்னுள் 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!' என என்னைப் பாட வைத்தன. 1963ல் துக்காராம் கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டம் பெறுகிறார். நான் 1969ல் அதே கல்லூரியில் பட்டம் பெற்று, பின்னர் அங்கு விரிவுரையாளராகப் பணியாற்றுகையில் 1975ல் ராஜ்குமார் பாரதி, மற்றும் பின்னாளில் இந்திய கிரிக்கெட்குழுவில் கேப்டனாக விளங்கிய ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி இருவரும் முதலாண்டு மாணவர்களாகச் சேருகிறார்கள். D செக் ஷன் என்று ஞாபகம். இவர்கள் இருவருமே என்னுடைய பொறியியல் வரைபட வகுப்பு மாணவர்கள் என்று சொல்லிக் கொள்வதில்தான் எனக்கு எத்தனைப் பெருமை! இருக்காதா, என்ன! 1989ல் முதன் முறை துக்காராமோடு TNF நிர்வாகக் குழு கூட்டம் ஒன்றில் கிளீவ்லேண்டில் அறிமுகமானதிலிருந்து நன்றாக அவரை அறிவேன். தென்றலுக்காக அவரை நான் நேர்காண வேண்டும் என்று எத்தனையோ முறை கேட்டுக் கொண்டபோதெல்லாம் விளம்பரத்தில் விருப்பமில்லாது 'அட, போய்யா' என்று உரிமையோடு சொல்லித் தட்டிக் கழித்து விடுவார். பின்னர் நான் ஆஸ்திரேலியாவில் பணியாற்றுகையில் தென்றலின் சார்பில் பேட்டி கண்டாலும் ஏனோ அது முழுமை பெறாது போயிற்று. அவரது நீண்ட நெடும் வாழ்க்கைப் பாதையில் தொழில் முறையிலும் சரி தொண்டாற்றும் பணிகளிலும் சரி தனியொரு முத்திரை பதித்தவர் துக்காராம். அவரது நேர்காணலை தென்றலில் இன்று பார்த்தபோது சற்றே நெகிழ்ந்து போனேன். தொழில்துறையில் அவரது சாதனைகள் தமிழ் இனத்துக்கு, குறிப்பாக இளைய சமுதாயத்துக்கு ஓர் எடுத்துக் காட்டாய் இருந்த போதும், துக்காராமின் ஈகைத் திறன் பெரிதும் போற்றப் பட வேண்டிய ஒன்றாகும். தமிழ் நாடு அறக் கட்டளையின் சென்னை அலுவலகம் கட்டப் படுகின்ற நாட்களில் 'பொருளின்மையால் கட்டுமானம் எங்கே நின்று விடுமோ' என்று வாடி நின்ற நேரத்தில் சென்னையில் தனது தந்தை தந்திருந்த பூர்வீக வீட்டை விற்று உதவி செய்த அவரது பெருந்தன்மை நன்றியோடு நினைக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவரது பணிகள் அனைத்துக்கும் தோளோடு தோள் கொடுத்து அவர் துவண்டு நின்ற சில பொழுதுகளிலெல்லாம் தூணாக நின்றிட்ட துக்காராமின் துணைவியார் திருமதி ரோகிணி பழகுவதற்கு இனியதொரு பண்பாளர். இனி, ராஜ்குமார் பாரதி. என்னுடைய பள்ளி நாட்களிலிருந்தே மகாகவியை எனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் நான் இங்கு அமெரிக்க குடியுரிமை பெற்றபோது எனது இடைப் பெயரில் பாரதி என்று சேர்த்துக் கொண்டதில் பெருமையுண்டு. எனது மாணவரான ராஜ்குமார், பாரதியின் கொள்ளுப்பேரன் என்று அறிந்த போது அவர்மீது தனிப் பட்ட முறைமுறையில் 'பற்று மிகுந்து' வரப் பார்த்திட்டேன். வரைபட வகுப்பானதால் ராஜ்குமாரோடு உரையாடுவதுண்டு. அவரது பணிவு, பரிவு இரண்டும் எனக்கு அப்போதே பிடித்துப் போனது. பின்னர் டெட்ராய் நகர் என்று எண்ணுகிறேன் .. TNF விழா ஒன்றில் மேடையில் பாட வந்திருந்த அவரை இனம் கண்டு "ராஜ்குமார்’ என்று நான் அழைத்தபோது சற்றே திகைத்து 'சார், கோமதி நாயகம் சார் (பூர்வோத்திரத்தில் என்னுடைய பெயர்!) ...' என்று ஞாபகமாய்ச் சொல்லி என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். அதனாலேயே சொன்னேன் ''அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!’என்று. 'இந்த நாள் அன்று போல் இல்லையே' என்றதொரு ஏக்கமும் இல்லாமலில்லை!

Article: நரேந்திர மோதி: புதியன புகுதல்
Category: சிறப்புப் பார்வை (Jun 2014) Posted On: Jun 04, 2014
மிகச் சிறந்த ஆக்கபூர்வமான கருத்துரை. 'இனியொரு விதி செய்வோம்' என்று என்றோ கூறிச் சென்ற மகாகவியின் வரிக்குப் புத்துயிர் வந்தது போல் ஓர் உணர்வு உங்கள் எழுத்தைப் படித்தபோது வராமலில்லை, நன்றி!

Article: குடிப்பெயர்ச்சி
Category: கவிதைப்பந்தல் (Jun 2010) Posted On: Jul 02, 2013
நறுக்கென்று ஓர் கவிதை. ஆயிரம் எண்ணங்களை நாலு வரிகளில் சொன்ன அழகுக் கவிதை. வாழ்த்துக்கள்.





© Copyright 2020 Tamilonline