Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோட்டம்
Tamil Unicode / English Search
 View Comments
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்க்கின்ற சாரதி-Apr 2016
4 Comments
By: Hari Krishnan (India) Apr 10, 2016 - My other reviews << Return to Article
திரு ஸபாஸ: அது என்னுடைய கூற்றன்று. வியாசர் அவ்விதம் சொல்கிறார். துரியோதனனுக்கும் பீமனுக்கும் ஆயிரம் யானை பலம். இது பாரதியின் பாஞ்சாலி சபதத்திலும் சொல்லப்படுகிறது. கரியோ ராயிரத்தின் - வலி காட்டிடு வோன்என்றக் கவிஞர்பிரான் பெரியோன் வேதமுனி - அன்று பேசிடும் படிதிகழ் தோள்வலியோன் என்று துரியோதனனைப் பற்றி பாரதி சொல்கிறான். இது வியாச பாரதத்திலிருந்து செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு. பீமனும் துரியோதனனுக்குச் சமமான பலம் உடையவன். இந்த பீமனுடைய இரும்புப் பிரதிமையைத் தழுவியே நொறுக்கியவன் திருதிராஷ்டிரன். ஆகவே இந்தக் கேள்விக்கு வியாசர்தான் பதில் சொல்லவேண்டும். :-)

By: Hari Krishnan (India) Apr 09, 2016 - My other reviews << Return to Article
திரு சின்னஸ்வாமி வணக்கம். சஞ்சயன் பிடிபட்டது சாத்யகியிடம். பீமனிடமில்லை. நினைவுப் பிழை. மன்னிக்கவும். தான் சாத்யகியிடம் பிடிபட்டதையும்,வியாசரே நேரில் தோன்றித் தன்னை விடுவிக்கும்படிச் சொன்னதால் சாத்யகி தன்னை விடுவித்ததையும் சஞ்சயனே திருதிராஷ்டிரனிடம் சொல்கிறான். கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு: சல்ய பர்வம், 25ம் அத்தியாயம். http://www.sacred-texts.com/hin/m09/m09025.htm Nevertheless, a fierce battle took place between us and the division of Dhrishtadyumna. At last, vanquished by the latter, all of us retreated from that encounter. I then beheld the mighty car-warrior Satyaki rushing against us. With four hundred cars that hero pursued me in battle. Having escaped with difficulty from Dhrishtadyumna whose steeds had been tired, I fell among the forces of Madhava even as a sinner falleth into hell. There a fierce and terrible battle took place for a short while. The mighty-armed Satyaki, having cut off my armour, became desirous of taking me alive. He seized me while I lay down on the ground insensible நான் கவசத்தைக் கழற்றிவிட்டு ரத்தத்தால் நனைக்கப்பட்டு என் சஸ்த்ரத்தை இழந்து தனியனாக வரும் வழியில் துரியோதனனைக் கண்டேன் என்று சஞ்சயன் தெரிவிக்கிறான். அதாவது சஞ்சயன் போர்க்களத்தில் கவசம் அணிந்தும் ஆயுதமேந்தியவனுமாக இருந்திருக்கிறான் என்பது அவன் வாய் மொழியாகவே சொல்வது. சல்ய பர்வம், 29ம் அத்தியாயம். http://www.sacred-texts.com/hin/m09/m09029.htm Dhrishtadyumna, seeing me, laughingly addressed Satyaki, saying, 'What is the use of seizing this one? Nothing will be gained by keeping him alive.' Hearing these words of Dhrishtadyumna, the grandson of Sini, that great car-warrior, uplifting his sharp sword, prepared to slay me. Just at that juncture, the Island-born Krishna of great wisdom (Vyasa), coming there, said, "Let Sanjaya be dismissed alive! By no means should he be slain!" Hearing these words of the Island-born, the grandson of Sini, joined his hands, and then, setting me free said unto me, "Peace to thee, O Sanjaya, thou mayest go hence!" Permitted by him, I myself then, putting off my armour and making over my weapons, set out on the evening on the road leading to the city, my limbs bathed in blood அடுத்த தவணையில் விரிவாகச் சொல்கிறேன். எந்த வியாசர் வரம் கொடுத்தாரோ அவர்தான் விடுவிக்கச் சொல்கிறார். எனவே முரண்பாடு எதுவும் இல்லை. 'இவனை சஸ்திரங்கள் பிளவா' என்றால் 'இவன் யாரிடமும் தோற்க மாட்டான்' என்று பொருளில்லையல்லவா.

By: VPSarathy (India) Apr 08, 2016 - My other reviews << Return to Article
விஷயங்களை நன்கு ஆராயும் வல்லமை படைத்த கதை ஸ்ரேஷ்டரே, உமக்கு நமஸ்காரம். திருதிராஷ்டிரனைப்பற்றிச் சொல்லும்போது பத்தாயிரம் யானை பலம் கொண்டவன் என்று குறிப்பிடுவது மிகவும் மிகுதியாகத் தெரிகிறது. ஒரு யானை பலம் என்ன என்று அறிந்த நமக்கு ஒரு கிழவனுக்கு 10,000 யானை பலம் என்ற வர்ணனை ஜீரணிக்க முடியவில்லை. இதற்கு ஒரு நல்ல சுக்கு கஷாயம் தாருங்கள். இப்படிக்கு ஸா பா ஸா .

By: Chinnaswamy (India) Apr 08, 2016 - My other reviews << Return to Article
போன மாதம் பார்த்திராத சாரதி யாகவும் இந்த மாதம் பார்க்கின்ற சாரதி யாகவும் நீங்கள் கொடுத்துள்ள தலைப்பு சுவாரஸ்யமாக இருக்கிறது. சஞ்சயனை பற்றி, "இவனை சஸ்திரங்கள் பிளவா. சிரமம் வருத்தாது" என்று வியாசர் கூறியிருக்கும்போது பீமனிடம் அகப்பட்டு தவித்ததாகவும், "இந்த எலியை என்ன செய்வது" என்று சஞ்சயனை விட்டுவிட்டதாகவும் சொல்வது முரணாக இருக்கிறதே! ஒருவேளை அது பீமனுக்கு தெரியாதோ? எனினும் உங்கள் தொடர் அடுத்த மாதம் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது நிஜம். உங்கள் ரசிகன் V.C.S. (V. சின்னஸ்வாமி) 8/4/2016





© Copyright 2020 Tamilonline