Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சமயம்
அஞ்சலி | சிரிக்க சிந்திக்க | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 View Comments
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்-Oct 2015
4 Comments
By: SaaPaaSaa (India) Oct 26, 2015 - My other reviews << Return to Article
ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். உங்கள் விளக்கமான பதில் கண்டேன். ஒரு விளக்கத்தை ஆதாரத்துடன் தர நீங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் ஸ்ரத்தையும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன. மிக்க நன்றி. இப்படிக்கு, ஸாபாஸா .

By: Hari Krishnan (India) Oct 24, 2015 - My other reviews << Return to Article
திரு ஸபாஸா: சுரங்கம் பெரிதாய் இருந்தது என்று மட்டும்தான் சொல்லப்பட்டுள்ளது. பீமன் அனைவரையும் தூக்கிக் கொண்டு நடக்கும் விதத்தை வைத்து அனுமானித்தால் மூன்று, நான்குபேர் கைகோத்துக் கொண்டு செல்லுமளவுக்கு அகலமாகவும், குனியத் தேவையில்லாமல் உயரமாகவும் இருந்திருக்கிறது என்று அனுமானிக்க முடிகிறது. மூலத்தில் இதைத் தவிர வேறு விவரங்கள் இல்லை. சில பதிப்புகளில் நீள அகல விவரங்கள், சுரங்கத்துக்காகத் தோண்டிய மண்ணை எப்படி, எங்கே கொட்டினார்கள், எத்தனை காலத்தில் சுரங்கம் வெட்டினார்கள் (சுமார் ஒருமாத காலத்தில்) என்றெல்லாம் விவரங்களை 'அளந்திருக்கிறார்கள்'. மூலத்தின் இரண்டு மொழிபெயர்ப்புகளை அருகருகே வாசித்தபிறகு எனக்கு மற்ற பதிப்புகளின் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது. கற்பனையான பல விவரங்களை வலிந்து திணித்து 'ஆதாரபூர்வமானது' என்று அட்டையில் அச்சிட்டுவிடுகிறார்கள். இவையே இப்படியென்றால், தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். காதில் ஒரு பூவையல்ல, ஒரு பூந்தோட்டத்தையே போட்டுவிடுகிறார்கள். இந்த விவரங்கள் மூலத்தின் இரண்டு மொழிபெயர்ப்பிலும் கிடைக்கவில்லை. பலவற்றை எதிர்பார்த்தே செய்திருக்கிறார்கள் என்பதால், நிச்சயமாக போய்வரத் தடையற்றதாய், வசதியானதாய் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. தீப் பற்றும்போது மாளிகையின் எந்தப் பகுதியில் இருந்தாலும் விரைவாக அடைய வசதியாக மாளிகையின் நடுப்பகுதியை சுரங்கத்தின் மறைக்கப்பட்ட வாயிலுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதே அவர்களுடைய அணுகுமுறையைப் பற்றி விரிவாகக் கூறுகிறது.

By: SaaPaaSaa (India) Oct 06, 2015 - My other reviews << Return to Article
அன்புள்ள ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். இந்த மாதக்கட்டுரை கண்டேன். "ஆழமான மடு கோடைக்காலத்தில் அடியில் குளிர்ச்சியாகவும் மேலே உஷ்ணமாகவும் இருப்பது போல்" என்பது திருதிராஷ்ட்ரன் மனநிலையைக் காட்ட நல்ல உதாரணம். ரசித்தேன். ஒரு சந்தேகம் துளிர்க்கிறது:- பொதுவாக சுரங்கம் என்பது குனிந்தவண்ணம் ஒருவன் மட்டுமே செல்லக்கூடிய சிறிய பாதையாக இருக்கும். அதில் பீமன் மற்ற ஐவரைத் தூக்கிக்கொண்டு விஸ்தாரமாக செல்வது எங்ஙனம் சாத்தியம் ? வெளியில் வந்தபிறகு வேண்டுமானால் தூக்கிக்கொண்டு சென்றிருக்கலாம். இந்த சுரங்கத்தை விதுரரின் ஆட்கள் எவ்வளவு நாட்களில் அமைத்து முடித்தனர் என்ற தகவல் ஏதும் உள்ளதா? இப்படிக்கு உங்கள் - ஸாபாஸா.

By: Chinnaswamy (India) Oct 06, 2015 - My other reviews << Return to Article
அன்புள்ள திரு ஹரிக்ருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய ஆராய்ச்சி யில் கிடைத்த விஷயங்களை அறிய தினமும் நான் தென்றலை தேடி நின்றேன் . இன்றுதான் கிடைத்தது. பொதுவாக பாண்டவர்களை காப்பாற்ற விதுரர் மாற்று ஏற்பாடு செய்தார் என்கிற அளவில்தான் நான் அறிந்திருந்தேன். விசைப்படகும் படகோட்டியுடன சங்கேத வார்த்தைகளும் எனக்கு பிரமிப்பை உண்டாக்குகிறது. ஆக விசைப்படகு என்பது அந்தக்காலத்திலேயே உண்டு என்பதும் புலனாகின்றது. மேலும் அதன் தொடர்ச்சியை அறிய அடுத்த மாதம் வரை காத்திருக்கிறேன். இப்படிக்கு உங்கள் ரசிகன் VCS© Copyright 2020 Tamilonline