Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ICC சேவாத்தான் திரட்டியது $500K நிதி
நாடகம்: 'இது நம்ம நாடு'
கச்சேரி: அனன்யா அஷோக்
தல்சா: மகாலட்சுமி ஆலய ஆண்டு விழா
மாயா கணேஷ்: அரங்கேற்றம்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
நிருத்யகல்யா: 'பால்யா'
TNF ஃபிலடெல்ஃபியா: ஈகைத் திருவிழா
பிட்ஸ்பர்க்: TNF - தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி
பாலாஜி கோவில்: உத்சவ மூர்த்தி ஸ்தாபனம்
சிமி வேல்லி: தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா
பாலசம்ஸ்கிருதி சிக்ஷா: ஆண்டு விழா
ஆதியோகிக்கு அர்ப்பணம்: ராதே ஜக்கியின் பரதநாட்டியம்
ஹூஸ்டன்: TNF செயலூக்க விழா
அரங்கேற்றம்: திரிவேணி கோர்
பாரதி வித்யாஸ்ரமம் ஆண்டு விழா
- அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி|ஜூலை 2014|
Share:
மே 18, 2014 அன்று, நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தின் கலாசாரப் பள்ளியான "பாரதி வித்யாஸ்ரமம்" தனது மூன்றாவது ஆண்டு விழாவைஆலய அரங்கில் கொண்டாடியது. பால கோகுலம் என்ற பெயருடன் துவக்கப்பட்ட இப்பள்ளி, திரு. லக்ஷ்மி முனுகூரின் தலைமையில், தமிழ், ஹிந்தி, சமஸ்கிருத மொழிகள், கர்நாடக சங்கீதம், யோகாசனம், மற்றும் இந்து சமயம் குறித்த அறிவு போன்ற பல்வேறு அம்சங்களை போதிக்கிறது என்று ஆலய நிறுவனர் திரு. வீரமணி ரங்கநாதன் விளக்கினார்.

பங்கேற்ற ஏராளமான குழந்தைகள் அருமையான நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். "ப்ரணம்ய சிரஸா தேவம்" என்ற விநாயகர் துதியில் ஆரம்பித்து, "தீராத விளையாட்டு பிள்ளை" என்று விஷமக்காரக் கண்ணனின் லீலைகளக் கொண்டாடும் நாட்டியத்துடன் நிறைவுபெற்றது. இந்த விழாவை அழாக நடத்தினார் திரு. பிரேம் ஆனந்த ராவ்.

"வந்தே மாதரம்" பாடலை திருமதி உஷா துவாரக்கின் சங்கீத மாணவர்கள் பாடினர். இந்தி வகுப்பு மாணவர்கள், ஷாருக் கான் நடித்த "My Name is Khan" படத்தின் "ஹம் ஹோங்கே காமியாப்" பாடலை அருமையாகப் பாடினர். தவிர "ஏறு மயிலேறி" (திருப்புகழ்), "பச்சை மயில் வாகனனே" போன்ற தமிழ்ப் பாடல்கள், மகிஷாஸுர மர்த்தினி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், அன்னமாச்சாரியார் கிருதி, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இயற்றிய இங்கிலீஸ் நோட்ஸ் என்று பல மொழிகளில் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். திரு. சிவஹரன் துரைராஜா மிருதங்கத்திலும், திருமதி உமா சுப்பிரமணி கீபோர்டிலும் பக்கவாத்திய உதவி அளித்தனர்.

பஞ்சதந்திரக் கதை, தசாவதாரம், "ஃப்ளோரிடாவாழ் தவளை" என்று பல நாடகங்களை சமஸ்கிருத பாரதியின் உதவியுடன் நடத்தப்படும் சமஸ்கிருத வகுப்பு மாணவர்கள் அளித்தனர். உயர்வகுப்பு மாணவர்கள் பகவத் கீதையை தங்கள் கண்ணோட்டத்தில் விளக்கினர். இந்திய காலக் கணக்கில் வரும் யுகம், கல்பம், மன்வந்தரம் போன்ற பதங்களின் அர்த்தங்களை விளக்கும் காட்சி ஒன்றையும் அளித்தனர். திருமதி. லதா தாசரி நடத்திய புராணங்களைப் பற்றிய வினாடி வினா ரசிக்கும்படி இருந்தது. நீல் தனராஜ் என்ற மாணவர் Eagle Scout நிலை பெறுவதற்காகத் தலைமையேற்று நடத்திய ஒரு ஆலயப் பணியைப் பற்றிப் பேசினார். இந்து கலாச்சாரத்தை அறியாத அமெரிக்க மாணவர்களுடன் இவர் உருவாக்கிய ஒரு அழகான மண்டபம், கோவிலின் ஒரு சந்நிதியை இப்பொழுது அலங்கரிக்கிறது. திரு ராயுடு ராயசம் கல்வியின் உண்மையான பலன் அடக்கம் மற்றும் நேர்மை மூலமே அடைய முடியும் என்று "வித்யா ததாதி வினயம்" என்ற சுலோகத்தின் மூலம் விளக்கினார்.
மேலும் அறிய: www.hindutemplenh.org.

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
நியூ ஹாம்ப்ஷயர்
More

ICC சேவாத்தான் திரட்டியது $500K நிதி
நாடகம்: 'இது நம்ம நாடு'
கச்சேரி: அனன்யா அஷோக்
தல்சா: மகாலட்சுமி ஆலய ஆண்டு விழா
மாயா கணேஷ்: அரங்கேற்றம்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
நிருத்யகல்யா: 'பால்யா'
TNF ஃபிலடெல்ஃபியா: ஈகைத் திருவிழா
பிட்ஸ்பர்க்: TNF - தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி
பாலாஜி கோவில்: உத்சவ மூர்த்தி ஸ்தாபனம்
சிமி வேல்லி: தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா
பாலசம்ஸ்கிருதி சிக்ஷா: ஆண்டு விழா
ஆதியோகிக்கு அர்ப்பணம்: ராதே ஜக்கியின் பரதநாட்டியம்
ஹூஸ்டன்: TNF செயலூக்க விழா
அரங்கேற்றம்: திரிவேணி கோர்
Share: 




© Copyright 2020 Tamilonline