தேவையான பொருட்கள்: வெந்த உருளைக்கிழங்கு - 2 கடலை மாவு - 1 மேசைக்கரண்டி பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 6 புளி - 1 எலுமிச்சையளவு உப்பு - தேவைக்கேற்ப மிளகுத்தூள் - 1 மேசைக்கரண்டி சீரகம் - 1 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் (பொரிக்க) - 1/2 லிட்டர்
செய்முறை வாழைப்பூவை அரிந்து போட்டு அதில் புளியைக் கரைத்து ஊற்றி நன்றாகக் கலக்கவும். அதில் வெந்து மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், மிளகு, சீரகம் இவற்றுடன் அளவாக உப்பையும் போட்டு நன்றாகச் சேர்த்துப் பிசைந்து, எலுமிச்சைபோல் சிறு சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும். எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் இரண்டு, மூன்று உருண்டைகளாக பொட்டு பொரித்து எடுக்கவும்.
வசந்தா, சான்ஹோஸே, கலிஃபோர்னியா |