தைப்பூச பாதயாத்திரை
கான்கார்ட் முருகன் ஆலய தைப்பூச பாதயாத்திரை ஃபிப்ரவரி 7, 2015 நாளன்று நடைபெற்றது. இந்த ஆண்டு 1200 பேர் முன்பதிவு செய்திருந்தனர் சிலர் ஃப்ரீமான்ட் நகரிலிருந்து 40 மைல் நடந்துவந்தனர். அவர்கள் முந்தைய நாள் காலை கிளம்பி 24 மைல்கள் நடந்து, அன்று மாலை சான் ரமோன் நகரில் தங்கினர். சான் ரமோன் நகரிலிருந்து தொடங்கும் 20 மைல் பயணத்தில் பெரும்பாலனவர்கள் கலந்துகொள்வர். சான் ஹோசே நகர் எவர்கிரீன் பகுதியிலிருந்தும் சிலர் வந்தனர்.

தன்னார்வத் தொண்டர்கள் சீருடையில் நடந்தும், இருசக்கர ஊர்தியிலும் உடன்வந்தது மட்டுமின்றி, சில சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள். இளந்தலைமுறையினர் பலர் இந்தத் தொண்டில் பங்கேற்றது சிறப்பான செய்தி.

மூன்று மைலுக்கு ஒரு நிறுத்தம் ஏற்படுத்திச் சுவையான உணவு அளித்தனர். நடைப்பயணம் முழுவதும் தாகம் தீர்க்கக் குளிர்பானங்கள் தரப்பட்டன. பள்ளிக்கூடப் பேருந்துகளைப் பயன்படுத்தி பக்தர்கள் திரும்பிச்செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். கன்கார்ட் ஆலயத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்தது ஒரு நல்ல அனுபவம். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் காப்புக்கட்டுதல்,காவடியெடுத்தல், பால் குடம், அபிசேகம், திருக்கல்யாணம் முதலான நிகழ்வுகள் நடைபெற்றன.

தைப்பூச நடைப்பயணத்தின் ஒருங்கிணைப்பாளார் சோலை அழகப்பன் திறம்பட ஏற்பாடுகளை ஒழுங்கமைத்திருந்தார்.

தகவல்: சுந்தர் முத்து
தமிழில்: ஜெய் முத்தழகு

© TamilOnline.com