ஃபிப்ரவரி 14, 2015 அன்று காதலர்தினத்தை ஒட்டி, டெக்சஸ் மாநிலத்தின் சான் அந்தோனியோ, வெஸ்ட்ஃபால்ஸ் நூலக மண்டபத்தில் சொல்லின் செல்வி திருமதி. உமையாள் முத்து அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரை மற்றும் இலக்கியத்தில் காதல் என்ற தலைப்பில் பலவகைக் காதல்களை மேற்கோள் காட்டி உமையாள் முத்து பேசியது வெகுவாகக் கவர்ந்தது. கம்பன், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் துவங்கிச் சமகாலத்து வாலி, வைரமுத்துவரை அவர்கள் எழுத்தில் காதல் எப்படிக் கையாளப்பட்டது என்பதை அவர் பாடியும், நகைச்சுவையோடு பேசியும் வழங்கியது சந்தோஷப்படுத்தியது. சான் அந்தோனியோ மாநகர் தமிழ்ச்சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதன் தலைவி திருமதி. வித்யா ஃபரூக் வரவேற்புரை மற்றும் நன்றியுரை அளித்தார்கள்.
முனைவர். ஸ்ரீனிவாசன் கண்ணப்பன் |