சுவாமி சுகபோதானந்தா அமெரிக்க வருகை
2015 ஏப்ரல் 2 முதல் 4ம் தேதிவரை சுவாமி சுகபோதானந்தா சன்னிவேலில் பல உரைகளும், 5ம் தேதி 'Managing LIFE Creatively என்ற தலைப்பில் செயல்பட்டறையும் வழங்க இருக்கிறார். சுகபோதானந்தா சிறந்த ஆன்மீக குரு என்பதோடு 'கார்ப்பரேட் குரு' என்றும் அறியப்படுகிறார். உலகெங்கிலும் அவர் வழங்கும் மன அமைதி, செழுமை பயிற்சி வகுப்புகள் நன்கறியப்பட்டவை ஆகும். நமது மனதை, வெளி வாழ்க்கையோடு (inner winner, outer winner) சேர்த்து நம்மை வெற்றி வீரராக்குவதே சுவாமிஜியின் சொற்பொழிவுகள், பட்டறைகளின் நோக்கம். சுவாமிஜி ஜனவரி 2,3 தேதிகளில் புனேயில் நடத்திய பட்டறையில் பாரதப் பிரதமர் மோதி மற்றும் நிதியமைச்சர் கலந்துகொண்டனர்.

நாம் வாழ்வில் பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. உறவுகளில் இணக்கம் இருப்பதில்லை. அதிகாரப்போட்டி வருகிறது. மனதில் வெறுமையும், குழப்பங்களும் இருக்கின்றன. அலுவலகத்தில் குறிக்கோளை அடையப் போராட வேண்டியிருக்கிறது. நம்மைச்சுற்றி ஒழுங்கு இருக்கவேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் நமக்குள் ஒழுங்கு இல்லை என்றால், வெளியேயும் ஒழுங்கைக் கொண்டுவர முடியாது. அகம்பாவம், பேராசை போன்றவற்றோடு அணுகினால், அதுவே நச்சுச்சூழல் ஆகிவிடுகிறது. அன்பு, தெளிவு, சாந்தம், நற்குணம் போன்றவற்றோடு அணுகும்போது அது வளத்துக்கு வழியாக அமைகிறது. சாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, நம்மை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற தெளிவு வந்தால் வாழ்க்கை சுகமானதாகிறது.

சுவாமிஜியின் செயல்பட்டறையும், உரைகளும் வாழ்க்கைக்குத் தேவையான இந்தத் தெளிவைக் கொடுத்து, வாழ்க்கைப் பயணத்தை ரசனையோடு, திறமையோடு, கொண்டாட்டத்தோடு இட்டுச்செல்கின்றன. அவசியம் பங்கேற்று மகிழ்ச்சியானவராகுங்கள்.

இலவச உரைகள்:
04/02/15 - வியாழன் - 7:30 to 9:00PM - "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்", இடம்: சனாதன தர்ம கேந்திரம் (193 Commercial Street, Sunnyvale, CA 94086)
04/03/15 - வெள்ளி - 7:30 to 9:00PM - "TBA", இடம்: ஸ்ரீ மஹாகாலேஸ்வர் கோவில் (2344A Walsh Avenue, Santa Clara, CA 95051)
04/04/15 - சனி - 6:30 to 8:00PM - "Managing LIFE Creatively", இடம்: சனாதன தர்ம கேந்திரம் (193 Commercial Street, Sunnyvale, CA 94086)

செயல்பட்டறை:
04/05/15 - Sunday - 3:00 to 7:00PM- "Managing LIFE Creatively", இடம்: சனாதன தர்ம கேந்திரம் (193 Commercial Street, Sunnyvale, CA 94086)
குறைந்தபட்ச நன்கொடை - $50. (தேவையை அனுசரித்துச் சிலருக்குச் செயல்பட்டறையில் பங்கேற்க உதவி உண்டு.)
சுவாமிஜி ஏப்ரல் 11, 12 தேதிகளில் டாலஸ், டெக்சஸிலும்; ஏப்ரல் 18, 19 தேதிகளில் பிட்ஸ்பர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலிலும் வழங்க இருக்கிறார்.

மேலும் தகவலுக்கும் முன்பதிவுக்கும்:
மின்னஞ்சல் - toshakila@gmail.com; vskamala@gmail.com; Rajani.k.bathina@gmail.com; ripudamangupta@gmail.com; bvb_777@yahoo.com;
தொலைபேசி - 408-425-2851 / 408-205-7035
வலைமனை: www.swamisukhabodhananda.org

நூ. சகிலா பானு,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com