டாலஸ்: அவ்வை தமிழ் மையம்: 'தமிழ் இசைவிழா 2015'
மார்ச் 21, 2015 அன்று மதியம் 2:00 முதல் 5:00 மணிவரை. ஃப்ரிஸ்கோ ஹைஸ்கூலில் (Frisco High School, 6401 Parkwood Drive, Frisco, TX 75034) அவ்வை தமிழ் மையம், தமிழிசை விழாவை நடத்தவுள்ளது. போட்டிகளின்றி, குழந்தைகளின் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் மேடையாக இது அமையும். 5 முதல் 17 வயதுவரை உள்ளோர் இதில் பங்கேற்கலாம். பல்வேறு இசைப்பள்ளிகளிலிருந்தும், குழுக்களிலிருந்தும் திறன்மிக்கோர் இதில் பங்கேற்று, செவ்விசை (classical), பகுதிச் செவ்விசை கொண்ட தமிழ்ப் பாடல்கள், பக்திப் பாடல்கள், திரையிசைப் பாடல்களைப் பாடலாம்.

கேட்டு மகிழ அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். பங்கேற்கப் பதிவுக்கட்டணமோ, நிகழ்ச்சிக்கு நுழைவுக்கட்டணமோ இல்லை.

பதிவுசெய்யவும், விதிமுறைகளை அறியவும்: www.avvaitamil.org/tamil-music-festival

பதிவுசெய்யக் கடைசி நாள்: மார்ச் 7, 2015

தொடர்புக்கு:
தொலைபேசி: +1-214-901-7735
மின்னஞ்சல்: info@avvaitamil.org
இணையம்: www.avvaitamil.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com