அமெரிக்காவில் இயங்கும் விபா (www.vibha.org) 'கலாகார்-2015' என்ற புகைப்படப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. ஏழைச் சிறாருக்குக் கல்வி தருவதை நோக்கமாகக் கொண்ட விபாவின் இந்தப் போட்டி, www.kalakaar.org என்ற வலைமனையில் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை புகைப்படங்களைச் சமர்ப்பிக்கலாம். இதில் அமெச்சூர் கலைஞர்கள் தொடங்கி தொழில்முறைக் கலைஞர்கள் வரை பங்கேற்கலாம். பரிசுகள் உண்டு.
1991ல் தொடங்கப்பட்ட, லாபநோக்கற்ற அமைப்பு விபா. இதன் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொண்டர்கள் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் 15 மையங்களில் செயல்படுகிறார்கள். இதுவரையில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் 190 உதவித் திட்டங்களுக்கு விபா உதவியுள்ளது. 2009ல் மின்னசோட்டா மையம் புகைப்படம், எழுத்து, ஓவியம் ஆகிய போட்டிகளை நடத்தியபோது, படைப்பாற்றலை ஒரு நல்ல சமூகப்பணிக்குப் பயன்படுத்தலாம் என்கிற எண்ணம் தோன்றியது. இது கொடுத்த உற்சாகத்தில், 2012, 2013ல் புகைப்படப் போட்டிகள் நடத்தப்பட்டன. 2013ம் ஆண்டின் போட்டியில் 50 நாடுகளிலிருந்து 1500 பேர் பங்கேற்றனர்.
'Click for a Cause!' என்றழைக்கப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்கக் கட்டணமில்லை. மேலும் அறிய: www.kalakaar.org கலாகார்: பரிசுபெற்ற படம் எடுத்தவர்: சசிகுமார்
செய்திக் குறிப்பிலிருந்து |