பாக்கர் வடி (மஹாராஷ்டிரம்)
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 300 கிராம்
கோதுமை மாவு - 150 கிராம்
வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உள்ளே தடவ
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
வெள்ளை எள் - 4 மேசைக்கரண்டி
மிளகாய்ப் பொடி - 2 மேசைக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கசகசா - 4 மேசைக்கரண்டி
கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
இரண்டு மாவுகள், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை நன்கு கலந்து தண்ணீர் விட்டுச் சப்பாதி மாவுபோலப் பிசையவும். வாணலியில் கசகசா, தேங்காயைச் சிவக்க வாசனை வரும்வரை வறுத்துப் பொடிக்கவும். அதில் மிளகாய்ப்பொடி, உப்பு, கரம்மசாலா, கறிவேப்பிலை, சர்க்கரை சேர்த்து, கெட்டியாகக் கரைத்த புளியையும் சேர்க்கவும்.

மாவை மெலிதான சப்பாத்திகளாக இட்டுச் செவ்வக வடிவமாக வெட்டவும். அதில் பொடித்த பொடியை கரண்டியால் நன்கு தடவவும். ஒவ்வொரு துண்டையும் உருட்டி, வட்டமாகச் சுற்றவும். ஓரங்களை சிறிது தண்ணீர் தொட்டு நன்கு ஓட்டவும். பின் அவற்றை 3 செ.மீ. நீளத் துண்டுகளாக வெட்டவும். இந்தத் துண்டுகளை எண்ணெயில் பொரிக்கவும். கரகரவென்று ருசியாக இருக்கும். நிறைய நாள் இருக்கும். இந்தப் பாக்கர் வடியின் பிறப்பிடம் பூனே.

பார்வதி ராமன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com