டிசம்பர் 6, 2014 அன்று அல்போன்சா மலபார் தேவாலயத்தில் குழந்தைகளின் திறமைகளை அனைவரும் கண்டு மகிழ்வதற்கான சிறப்பான நிகழ்ச்சியை மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். அறிமுகவுரையோடு விழா தொடங்கியது. ஆடல், பாடல் எனப் பின்னர் வந்த நிகழ்ச்சிகள் அனைவரின் மனதையும் வெகுவாகக் கவர்ந்தன. விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அவர்களின் பெற்றோர்கள் பெருமிதம் நிரம்பிய முகத்தோடு வீடு திரும்பினர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
சித்ரா ரத்தினம், டாலஸ், டெக்சஸ் |