ஜனவரி 17, 2015 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல்விழாவை ஜெயின் கோவில் அரங்கத்தில் நடத்தியது. நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெரியோரும் கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். திரு. டி.எஸ். ராம் வரவேற்புரை வழங்கினார். விரிகுடாப்பகுதியின் பிரபல நடன ஆசிரியைகளான திருமதி. இந்துமதி கணேஷ், திருமதி. ஸ்னிக்தா வெங்கடரமணி ஆகியோரின் மாணவிகள் பரதநாட்டியம் ஆடினார். அழகான குறத்தி நடனத்தையும், கிராமிய இசையையும் திருமதி. சுகிசிவா ஒருங்கிணைத்திருந்தார். திருமதி. மீனாக்ஷி சுவாமிநாதன், திருமதி. சங்கீதா பாலாஜி, திரு. அசோக், திருமதி. பிரியா ராமச்சந்திரன், திருமதி. ரஞ்சனி மண்டா ஆகியோர் திரைப்பாடல்களுக்கு நடனம் அமைத்திருந்தனர். குழந்தைகள் ஸ்ருதி விஜயகுமார், வைஷ்ணவி, கவிதா செந்தில்குமார், திருமதி. சந்திரசேகர், திரு. வெங்கடேஷ், திருமதி. ஐஸ்வரியா ஆகியோரின் கரியோக்கி இசை அசத்தலாக இருந்தது.
திரு. பத்மநாபன், திருமதி. கௌரி சேஷாத்திரி ஒருங்கிணைத்த கவியரங்கில் குழந்தைகள் அழகாகக் கவிதை வாசித்தனர்., திரு. சமியுல்லா, திரு. ஸ்ரீதரன் கோபாலன், திரு. லூர்து ராஜ், திருமதி. மதினா அன்வர், திருமதி.சித்ரா ஸ்ரீதரன் ஆகியோர் பங்குகொண்ட நகைச்சுவை நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு கைதட்டல்களை அள்ளிச்சென்றன. பெரியவர்களுக்கான 'பாட்டுக்குப்பாட்டு' நிகழ்ச்சியை திரு. பொற்செழியன் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக்கு முக்கியவிருந்தினராக நடிகை சச்சு வந்திருந்து, தமது நாடக, திரைப்பட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியை திரு. முத்து எழிலன், திருமதி. சுபா கோபாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினர். திருமதி. உஷா அரவிந்தன் நன்றி நவின்றார்.
நித்யவதி சுந்தரேஷ், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |