சான் டியகோ: பொங்கல் திருவிழா
ஜனவரி 18, 2015 அன்று சான் டியகோ தமிழ் அகாடமி பொங்கல் திருநாளை விமரிசையாகக் கொண்டாடியது. சிறார்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் புத்தாடை அணிந்து வந்து மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். கோலங்களால் மாணவர்கள் மனையை அலங்கரிக்க, மூன்று பொங்கல் பானைகளை அடுப்பிலேற்றி விழா துவங்கியது. பிஞ்சு விரல்களால் அரிசியை மாணவர்கள் அள்ளிப் பொங்கல்பானையில் போட, பெற்றோர் முகத்தில் அத்தனை பிரகாசம்! "பொங்கலோ பொங்கல்" என ஆரவாரித்து மகிழ்வைப் பரிமாறிக் கொண்டனர். யாவரும் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் விளையாடினர்.

பின்னர் சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. விருந்துக்குப் பின், ஒரு பண்ணைவீட்டுக்குச் சென்று அங்கிருந்த விலங்குகளைப் பார்வையிட்டனர். குழந்தைகள் அங்கிருந்த விலங்குகளைத் தொட்டு விளையாடியும், உணவூட்டியும் மகிழ்ந்தனர். காலை பத்து மணிக்குத் தொடங்கிய விழா மாலை நான்கு மணிவரை நடைபெற்றது.

விவரங்களுக்குப் பார்க்க:
www.tamilforkids.com, www.facebook.com

© TamilOnline.com