இருவர் மட்டும் நடிக்கும் 'பை டூ' (By 2)
இயக்குநர் கே. பாக்யராஜ் குத்துவிளக்கு ஏற்ற, நடிகர் விஜய், டி. ராஜேந்தர் காமிராவை முடுக்கி வைக்க, 'By 2' படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் நடிகர் பார்த்திபன்.

ஆர். ஜெகதீஷ் தயாரிப்பில் உருவாகும் 'பை 2'வைப் பிரபல கன்னட இயக்குநர் துவராகி ராகவன் இயக்கவிருக்கிறார். நாயகன், நாயகி என இரு கதாபாத்திரங்கள் மட்டுமே படம் முழுவதும் உலா வரும் என்பது தான் இப்படத்தின் சிறப்பம்சம். பாடல்களை வைரமுத்து இயற்ற, விஜய் ஆண்டனி இசையமைக்கவிருக்கிறார். ஒளிப்பதிவை பி.கே.எச். தாஸ் கவனிக்கிறார்.

படப்பிடிப்பு முழுவதும் கேரளாவிலுள்ள சாலக்குடியிலும், கர்நாடகாவிலுள்ள அடர்ந்த காடுகளிலும் நடைபெறவிருக்கிறது. இது காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி எல்லாம் கலந்த கதை என்று கூறும் இயக்குநர் துவராகி ராகவன் 'என் படம் பேசும். என்னைத் தமிழ் ரசிகர்கள் கைவிடமாட்டார்கள்'' என்கிறார் நம்பிக்கையோடு.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com