ஜனவரி 24, 2015 அன்று மிச்சிகன் தமிழ்ச்சங்கம் பொங்கல் விழாவை குரோவ்ஸ் உயர்நிலைப் பள்ளியில் நடத்தியது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சி ஒரு விவாதமேடை. நடுவர் திண்டுக்கல் லியோனி. தலைப்பு: "தமிழ்த் திரைப்படப் பாடல்களில் மேலோங்கி நிற்பது காதலா, தத்துவமா, நையாண்டியா?" குழுவுக்கு மூன்றுபேராக மொத்தம் ஒன்பதுபேர் பங்கேற்றனர். நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்தது. லியோனி தமக்கே உரிய பாணியில் நகைச்சுவையாகப் பேசியும் பாடியும் விவாதத்தை நடத்திச் சென்றார். இறுதியில் மேலோங்கி நிற்பது காதலே என்று தீர்ப்பளித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள் பலர் தமிழின்மேல் ஆர்வத்துடன் தைரியமாக மேடையேறியது காண நன்றாக இருந்தது.
காந்தி சுந்தர், டெட்ராய்ட், மிச்சிகன் |