டாலஸ்: குருபரம்பராவின் 'சங்கமம்'
ஏப்ரல் 4, 2015 அன்று கார்லண்ட் ப்ளாசா தியேட்டரில் 'சங்கமம்' கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குருபரம்பரா தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் இந்த நிகழ்ச்சியில் முத்துசுவாமி தீட்சதரின் நோட்டுஸ்வரங்களுக்கு, ஐரோப்பிய நடனங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கெனச் சென்னையிலிருந்து நடன ஆசிரியை டாக்டர். அனுபமா கைலாஷ் டாலஸிற்கு வருகைதந்து குழந்தைகளுக்கு நடனம் பயிற்றுவிக்கிறார். உடன்வந்துள்ள டாக்டர். அனுசுயா மூர்த்தி சங்கீதப்பயிற்சி அளிக்கிறார். இருவரும் வடிவமைத்து, இயக்கி கர்நாடக இசையும் ஐரோப்பிய நடனமும் கலந்து விருந்து படைக்க இருக்கிறார்கள். டாலஸ் குழந்தைகளுக்கு இதுவொரு அரிய வாய்ப்பு.

தொடர்புக்கு: புவனா - jaisri_ak@yahoo.com

புவனா,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com