10 எண்றதுக்குள்ள


'ஐ' படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படம் '10 எண்றதுக்குள்ள.' இதில் விக்ரமுடன் இணைந்து நாயகியாக நடிப்பவர் சமந்தா. இவர்களுடன் பசுபதி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஜய் மில்டன் இயக்குகிறார். சென்னையில் இருந்து வடஇந்தியாவுக்கு செல்லும் லாரி டிரைவர் சந்திக்கும் பிரச்னைகளை மையமாகக்கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாச் சொல்கிறது கோலிவுட் குருவி. அந்த லாரி டிரைவர், வேறு யார். விக்ரம் தான். இசை டி. இமான். 10 எண்ணி முடிக்கறதுக்குள்ள வந்துருமா?

அரவிந்த்

© TamilOnline.com