சாகசம்


பிரசாந்த் நாயகனாக நடிக்கும் அதிரடி ஆக்‌ஷன் படம் சாகசம். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்க அருண்ராஜ் வர்மா இயக்குகிறார். இசை: தமன். இப்படத்தின் பாடல்களை சிம்பு, லட்சுமி மேனன், அனிருத், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிக, நடிகையரும் பாடியுள்ளனர். கூடவே சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், மோஹித் சவுஹான், ஹனிசிங், அர்ஜித் சிங் போன்றோரும் பாடியுள்ளனராம். இசை வெளியீட்டு விழா விரைவில் வெளிநாட்டில் நடக்க இருக்கிறது. இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி பிரசாந்துடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் என்று கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com