மீண்டும் மருதநாயகம்?


கமல் நடிப்பில் 1997ல் ஆரம்பிக்கப்பட்ட படம் மருதநாயகம். படத்தின் துவக்கவிழாவில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உட்படப் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். கமலுடன் சத்யராஜ், நாசர், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க, சில காட்சிகள் மட்டுமே படம் பிடிக்கப்பட்டது. பின்னர் நிதிச் சிக்கலால் கைவிடப்பட்டது. கமலின் லட்சியப்படமான இது மீண்டும் உயிர்பெற இருக்கிறது. 'உத்தமவில்லன்', 'விஸ்வரூபம் 2', 'பாபநாசம்' படங்கள் வெளியான பின்பு இப்படம் பற்றி கமல் அறிவிக்கக்கூடுமாம். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படம் தயாரிக்கப்பட இருக்கிறதாம்.

அரவிந்த்

© TamilOnline.com