அய்யனார் வீதி


கிராமத்துத் தெய்வம் அய்யனார். அவர் பெயரினாலான ஊரில் சமூகவிரோதிகள் தங்கி பிரச்சனை செய்கின்றனர். சமூக விரோதிகளின் கோரப்பிடியில் இருந்து கிராமம் ஆயுதத்தால் மீட்கப்பட்டதா, அன்பால் மீட்கப்பட்டதா என்பதைச் சொல்லவருகிறது 'அய்யனார் வீதி'. முக்கிய வேடங்களில் கே. பாக்யராஜ், பொன்வண்ணன் நடிக்கின்றனர். இவர்களுடன் சிங்கம்புலி, முத்துக்காளை, ராஜா, மீரா கிருஷ்ணன், சாய்பிரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பல்லாண்டுகளாக இசைக்குழுவை நடத்தி வரும் யு.கே. முரளி இப்படத்திற்கு இசையமைக்கிறார். ராஜ்குமார் ஜிப்ஸி இயக்குகிறார். நூற்றாண்டுக் கால சினிமா வரலாற்றில் காவல்தெய்வமான 108 அய்யனார்கள் பற்றிச் சொல்லியிருப்பது இதுவே முதல்முறை என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com