1. ஓர் அலமாரித் தட்டில் இருந்த புத்தகங்களில் காந்திஜியின் ‘சத்திய சோதனை’ இடமிருந்து நான்காவதாகவும், வலமிருந்து ஆறாவதாகவும் இருக்கின்றது. அந்த வரிசையில் எத்தனை புத்தகங்கள் இருந்தன?
2. அது ஒரு மூன்று இலக்க எண். இரண்டாவது இலக்கம் மூன்றாவது இலக்கத்தைவிட நான்கு மடங்கு அதிகம். முதல் இலக்கமோ இரண்டாவது இலக்கத்தைவிட மூன்று குறைவு. அந்த இலக்கம் எது?
3. ஒரு நெய் பாட்டிலின் எடை 2.5 கிலோ. நெய் பாதி காலியானதும் அதன் எடை 1.9 கிலோ இருந்தது என்றால் பாட்டிலின் எடை என்ன?
4. காயத்ரியின் தற்போதைய வயது 54. அவள் அம்மாவின் வயது 80. எத்தனை வருடங்களுக்கு முன்னால் காயத்ரியின் வயதை விட அவள் அம்மாவின் வயது மூன்று மடங்காக இருக்கும்?
5. சங்கர் வீட்டில் நடந்த விருந்துக்கு அவனது நண்பர்கள் பத்துப்பேர் வந்திருந்தனர். தனக்கு இரண்டு சாக்லேட் பார்களை எடுத்துக் கொண்ட சங்கர், மீதி இரண்டைத் தன் தம்பிக்குக் கொடுத்தான். சங்கரின்
நண்பர்களில் முதலாவமவர் இரண்டு சாக்லேட்டுக்களையும், இரண்டாமவர் நான்கு சாக்லேட்டுக்களையும், மூன்றாமவர் ஆறு சாக்லேட்டுக்களையுமாக இரண்டின் மடங்குகளில் பத்துப்பேரும் எடுத்துக் கொண்டனர்.
தட்டில் மீதமிருந்த சாக்லேட்டுக்களைச் சங்கரின் தாயும் தந்தையும் ஆளுக்கு மூன்றாக பகிர்ந்துகொண்டனர் என்றால் சங்கரிடம் இருந்த மொத்த சாக்லேட்டுக்கள் எவ்வளவு?
அரவிந்த்
விடைகள்1. N = A + B - 1 = 4 + 6 - 1 = 9
அலமாரியில் உள்ள மொத்த புத்தகங்கள் = 9
2. 141
3. பாட்டிலின் எடை = x
நெய்யின் எடை = y
இரண்டின் மொத்த எடை = 2.500 = x + y = 2500 -> (1)
பாதியளவு நெய் காலியானதும் பாட்டிலின் எடை = x + (y/2) = 1900 = 2x + y = 3800 -> (2)
இரண்டாவதிலிருந்து முதல் சமன்பாட்டைக் கழிக்க
2x + y = 3800 (-)
x + y = 2500
-------------------------
x = 1300
-------------------------
பாட்டிலின் எடை = 1.3 கிலோ.
4. காயத்ரியின் வயது = 54.
அவள் அம்மாவின் வயது = 80
வித்தியாசம் = 80 - 54 = 26
41 வருடங்களுக்கு முன்னால் காயத்ரியின் வயது = 54-41 = 13; அவள் அம்மாவின் வயது = 80-41 = 39. (மூன்று மடங்கு)
ஆகவே 41 வருடங்களுக்கு முன்னால் காயத்ரியின் வயதை விட அவள் அம்மாவின் வயது மூன்று மடங்காக இருக்கும்.
5. சங்கர் எடுத்துக் கொண்டது = 2.
அவன் தம்பி எடுத்துக் கொண்டது = 2 ஆக. மொத்தம் நான்கு.
சங்கரின் நண்பர்கள் பத்துப் பேர் வரிசை கட்டி எடுத்துக் கொண்டது = 2 ,4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20
ஆக 2 + 2 + 2 + 4 + 6 + 8 + 10 + 12 + 14 + 16 + 18 + 20 = 114
தந்தையும் தாயும் எடுத்துக் கொண்டது = 3 + 3 = 6
அக மொத்தம் சங்கரிடம் இருந்த சாக்லேட்டுக்கள் = 120