தேவையான பொருட்கள்: புலாவ் அரிசி - 1 கிண்ணம் பால் - 1 கிண்ணம் தண்ணீர் - 1 கிண்ணம் வெங்காயம் (பொடியாய் நறுக்கியது) - 1/4 கிண்ணம் பச்சைக்கொத்துமல்லி - சிறிதளவு புதினா (பொடியாய் நறுக்கியது) 1 மேசைக்கரண்டி சீஸ் - 1/4 கிண்ணம் உப்பு - ருசிக்கேற்ப முந்திரிப்பருப்பு - 10
செய்முறை: பாலும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு களைந்த அரிசி, வெங்காயம், புதினா, கொத்துமல்லி, உப்பு இவற்றைச் சேர்க்கவும். பாதி வெந்தவுடன் துருவிய சீஸ், வெண்ணெய் இரண்டும் பாதியளவு அதில் போட்டு நன்றாக வேகவிடவும். கடைசியில் பாக்கியுள்ள சீஸ், வெண்ணெய் சேர்த்துச் சமைத்து, மேலாக முந்திரி, கொத்துமல்லி போட்டு எடுத்து வைக்கவும். பூண்டு போட்டும் செய்யலாம். சாப்பிடச் சுவையாக இருக்கும்.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி |