வேர்க்கடலை சாதம்
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 1 கிண்ணம்
எள் - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 4 அல்லது 5
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
முந்திரிப்பருப்பு - 6
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
வடித்த சாதம் - 2 கிண்ணம்

செய்முறை:
வேர்க்கடலை, எள்ளு இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து தனியாகப் பொடி செய்து கொள்ளவும். உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் இவற்றை வாணலியில் துளி எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காயைச் சிவக்க வறுத்துக்கொண்டு எல்லாவற்றையும் மிக்சியில் பொடியாக்கவும். வடித்த சாதத்தில் மேலாகச் சிறிது எண்ணெய் விட்டுப் பொலபொலவென வைத்து, பொடிகள் மற்றும் உப்புப் போட்டுக் கலக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து முந்திரிப்பருப்பு வறுத்துப் போட்டு அலங்கரிக்கவும். இது மிகவும் சுவையான சாதம்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி

© TamilOnline.com