டிசம்பர் 6, 2014 அன்று பாரதி தமிழ் சங்கம் ட்யூலிப் பள்ளியுடன் இணைந்து மகாகவி பாரதியின் பிறந்தநாளை ஒட்டி ஓவியப் போட்டி ஒன்றை நடத்தியது. சங்கச் செயலாளர் திரு. ராம் வரவேற்புரை நிகழ்த்தினார். பாரதியின் பிறந்தநாள் இனி நாடுமுழுதும் கொண்டாடப்படும் என்று அறிவித்த இந்திய அரசுக்கு பாரதி தமிழ் சங்கம் நன்றி கூறியது. முன்னாள் தலைவர் திரு. ஸ்ரீ ஸ்ரீனிவாசா பாரதியின் வேடத்தில் வந்து பாரதிபற்றிச் சிறப்புரை ஆற்றியது குழந்தைகளிடையே வரவேற்பைப் பெற்றது.
85 குழந்தைகள் பங்கேற்ற ஓவியப்போட்டி 'பஞ்சபூதங்கள்' என்ற தலைப்பில் அமைந்திருந்தது. பரிசு பெற்றோர்:
3-5 வயது பிரிவு முதல் 3 பரிசுகள் - சிர்சீலன் முகிலன், சாதனா அறிவொளி, அத்விகா குமார். ஆறுதல் பரிசுகள் - மிருத்திகா குணசேகரன், ரிதன்யா ஸ்ரீநிவாஸ், வைஷ்ணவி முத்துசாமி, சாதனா அருண், ஓவியா ஸ்ரீநிவாசன்
6-8 வயது பிரிவு முதல் 3 பரிசுகள் - ரக்ஷிதா நாராயணசாமி, பரிஸா இப்ரா அபுதாஹிர், லாவண்யா அஜித் ஆறுதல் பரிசுகள் - நைனிகா ஸ்ரீநிவாசன், ரிஷி சந்திரசேகர், ரியா அசோக், அத்வைதா அகத்தீச்வரன்
9-11 வயது பிரிவு முதல் 3 பரிசுகள் - அனன்யா அகத்தீச்வரன், நேத்ரா ஸ்ரீநிவாசன், சஹானா ரமேஷ்குமார், விகாசினி சந்திரா ஆறுதல் பரிசுகள் - தீதா கணபதி, தன்வி கேள்.
சிறப்பு பிரிவு - ஆருஷ் யக்னா
சங்க உறுப்பினர் திரு. வெங்கடேஷ் பாபு நன்றி கூற விழா நிறைவுற்றது.
செய்திக்குறிப்பிலிருந்து |