சிகண்டி


விஜய் வசந்த் நாயகனாக நடிக்கும் படம் 'சிகண்டி'. நாயகியாக நிகிஷா படேல் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நாசர், சரண்யா, மனோஜ்.கே. பாரதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மாறுபட்ட கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடிக்கிறார். பள்ளிக்கல்வியின் தரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து உருவாகும் படம் இது. இயக்குனர் ராஜபாண்டி, "கிட்டத்தட்ட ஆறு மாதம் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகை நண்பர்களோடு ஆலோசித்து, தகவல் திரட்டி, திரைக்கதையை உருவாக்கினோம். பள்ளிக் கல்வியின் தரம் இப்படி இருக்கலாமே என்கிற எனது ஆதங்கம் இந்தச் சிகண்டியில் வெளிப்படும்" என்கிறார். அதுசரி, இந்தச் சிகண்டி பழிவாங்கப் போவது யாரை?

அரவிந்த்

© TamilOnline.com