சிகப்பு ரோஜாக்கள்-2


கமல்-ஸ்ரீதேவி நடிப்பில், பாரதிராஜா இயக்கி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. அதே தலைப்பில் இரண்டாம் பாகமும் தயாராகிறது. பாரதிராஜா தயாரிக்க அவருடைய மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குகிறார். கமல் நடித்த பாத்திரத்தில் விசாகன் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாரதிராஜாவும் களமிறங்குகிறார். இசை: ஜி.வி. பிரகாஷ்குமார். சிகப்பு ரோஜாக்கள்' படம் பார்க்கும் ஓர் இளைஞனுக்கு, அப்படத்தைப் பார்த்த பாதிப்பில் என்னவாகிறது என்பதுதான் படக்கதை. கதையை எழுதியிருக்கும் பாரதிராஜா, இப்படத்தில் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் இயக்குநர் பாரதிராஜாவாகவே நடிக்கிறார்' என்கிறார் கோலிவுட் கோவிந்து. திகில் கிளப்புங்க.

அரவிந்த்

© TamilOnline.com