மற்றுமொரு முதலீட்டு வாய்ப்பு: Real Estate Investment Trusts (REIT)
சிலருக்கு நிலபுலங்களில் முதலீடு செய்ய ஆர்வமிருக்கலாம், ஆனால் பெரிய அளவில் செய்வதற்கான வசதி இருக்காது. அப்படிப்பட்டவர்களும் தமது வசதிக்கேற்ப சிறிய முதலீடுகளைச் செய்து லாபம் பெற இந்தியாவின் SEBI (Securities and Exchange Board of India), REITக்களை ஏற்படுத்த நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இவை மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலச் செயல்படும். இவற்றின் யூனிட்டுகளை வாங்கி, அதில் டிவிடெண்டு பெறவும், முதலீட்டின் (யூனிட்டின்) மதிப்பு அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச முதலீடு 200,000 ரூபாய்.
இவற்றைப் பங்குச் சந்தையில் வாங்கவும் விற்கவும் முடியும். அதற்குக் குறைந்த பட்சம் 100,000 ரூபாய் பெறுமானம் உள்ளவற்றைத்தான் வாங்க/விற்க முடியும்.
*****
மானசரோவர் யாத்திரை
இந்திய அரசு அண்மையில் மானசரோவர் யாத்திரை செல்வோர் அதற்கான சேவை வரியைக் கொடுக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளது. இந்த வரிவிலக்கைப் பெற அவர்களது யாத்திரை குமாவூன் மண்டல விகாஸ் நிகம் (Kumaon Mandal Vikas Nigam Ltd.) வழியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். முன்னரே, ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் யாத்திரை செல்வோருக்கு இத்தகையதொரு வரிவிலக்கு உள்ளது குறிப்பிடத் தக்கது.
தொகுப்பு: சந்திரசேகர் கல்யாணம் |