டிசம்பர் 6, 2014 அன்று, மிச்சிகனிலுள்ள ஸ்கூல் ஆஃப் வேர்ல்ட் மியூசிக் அண்ட் டான்ஸ் தனது ஆறாவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் 'சகா' என்ற நாட்டிய நாடகத்தை அரங்கேற்ற உள்ளது. சகா என்றால் தோழன். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தோழமை மற்றும் அன்பின் பரிணாமங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. பாகவதம், பகவத் கீதை, மகாபாரதம் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு, ஆறு இந்திய மொழிகளில் பாடல்கள் கொண்டவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பர்மிங்காம், மிச்சிகனிலுள்ள சீஹோல்ம் ஹைஸ்கூலில் மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணிவரை விழா நடைபெறும். ஏறத்தாழ முப்பது கலைஞர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து வருகைதரும் வித்வான்களும் பங்கேற்கும் நாடகத்தை இயற்றி வடிவமைத்திருப்பவர், பள்ளியின் இயக்குனர் திருமதி. லலிதா ராமமூர்த்தி.
இந்தியாவின் பாரம்பரிய இசை மற்றும் நடன வடிவங்களைப் போற்றிப் பேணுவதோடு அவற்றை அமெரிக்காவில் வாழும் ஆசிய இந்தியக் குழந்தைகளுக்குப் பயில்விப்பது இந்தப் பள்ளியின் நோக்கமாகும். இது ஒரு லாபநோக்கற்ற இயக்கம்.
இப்பள்ளி ஏப்ரல் 2014ல் துபாய்க் கலைஞர்களை வைத்து அங்கே 'ருதுசம்ஹாரா' என்ற நிகழ்ச்சியை வழங்கியது. வடக்கத்திய மற்றும் இந்திய இசையின் ஃப்யூஷன், நவீன யுக்திகள் மூலம் இசைப்பயிற்சி போன்ற பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் லலிதா ராமமூர்த்திக்கு இத்தொண்டில் உறுதுணையாக இருப்பவர், பிரபல இசைக்கலைஞர் திரு. சசிகிரண்.
மேலும் விபரங்களுக்கு: லலிதா ராமமூர்த்தி - 248-767-4409 மின்னஞ்சல் - natyadhwani@gmail.com வலைமனை - www.musicdanceart.com
செய்திக்குறிப்பிலிருந்து தமிழாக்கம்: காந்தி சுந்தர் |