டக்கர்


பிரேம்ஜி அமர் நாயகனாக நடிக்கும் படம் டக்கர். மீனாட்சி தீக்ஷித், அருந்ததி இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். விடிவி கணேஷ், ஜான் விஜய், ஜெயபிரகாஷ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, கங்கை அமரனும், வெங்கட் பிரபுவும் சிறப்பு வேடங்களில் நடிக்கின்றனர். பாண்டிய நாடு பட வில்லன் சரத், வில்லனாக நடிக்கிறார். ஜெயபால் இயக்குகிறார். நகைச்சுவை மற்றும் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இப்படத்தில் பிரேம்ஜி கார்ப் பந்தய வீரராக நடிக்கிறார். இசையும் அவரே! தூள், டக்கர் தான்.

அரவிந்த்

© TamilOnline.com