பிசாசு


மிஷ்கின் இயக்கி வரும் த்ரில்லர் 'பிசாசு'. நாகா நாயகனாக அறிமுகமாகிறார். பிரயாகா என்ற புதுமுகம் கதாநாயகி. முக்கிய வேடத்தில் ராதாரவி நடிக்கிறார். பிரபல ஒளிப்படக் கலைஞர் வைட் ஆங்கிள் ரவிசங்கர், இந்த படம்மூலம் ரவிராய் என்ற பெயரில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். அர்ரோல் கெரில்லி என்ற புதுமுகம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாலா தயாரிக்கும் இப்படத்தில் நாயகி பிரயாகாதான் பிசாசு. இதற்காக 'டூப்' போடாமல் 60 அடிக்கும் உயரமான இடங்களிலிருந்து பறந்து பறந்து நடித்திருக்கிறாராம் அவர். இப்படம் பற்றி மிஷ்கின், "நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு ஹாரர் படம் இயக்க ஆசை. ரசிகர்களைப் பிசாசு பயமுறுத்தும் விஷயம் மட்டும் இல்லை; மனதை வருடும் விஷயமும் கூடத்தான். இந்த படத்துக்கான முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி மற்ற சிறிய பாத்திரங்களுக்கும் கூட நான்கு மாதம் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ளேன். படத்தின் உயிர்நாடி க்ளைமாக்ஸ்தான். ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் டோனி இந்தக் காட்சி அமைப்பில் மிரட்டி இருக்கிறார்" என்கிறார். பிசாசுன்னா பயமில்லாமல் இருக்குமா?

அரவிந்த்

© TamilOnline.com