டெம்பிள்டன் பேருரை: 'கைலாசநாதர் கோவில்: மாற்றமும் மாறாததும்'
ஜனவரி 9, 2015 அன்று மாலை 6 மணிக்கு, டேவிஸிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் நெல்சன் ஆர்ட் கேலரியில் 'Change and Persistence: the Kailasanatha Temple at Kanchi from the 8th to 21st centuries' என்ற தலைப்பில் பேரா. பத்மா கைமல் 'டெம்பிள்டன் பேருரை' ஆற்றுவார்.

பொது சகாப்தம் 700ல் பல்லவர்களால் கட்டப்பட்ட கலையெழில் மிக்க காஞ்சிபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோவில் மாற்றமடையாததெனத் தோன்றுகிறது. ஆனாலும் இடைப்பட்ட காலத்தில் பல நுட்பமான மாற்றங்களுக்கு அது உட்பட்டுத்தான் இருக்கிறது. இதன் அடிநாதமாக ஓடும் வரலாற்றுப் பின்னணியைக் குறித்துப் பல சுவையான கேள்விகளை எழுப்பித் தமது பேருரையில் விடைகளையும் தருகிறார் பேரா. பத்மா கைமல்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (பெர்க்கலி) இந்தியக் கலை வரலாற்றை ஜோனா வில்லியம்ஸின்கீழ் பயின்ற பத்மா கைமல், 1988லிருந்து கோல்கேட் பல்கலையில் பணிபுரிந்து வருகிறார். Scattered Goddesses: Travels with the Yoginis (Ann Arbor: Association of Asian Studies, 2012) என்ற அவரது நூல் சிந்திக்கவைக்கும் பல கோணங்களை நம்முன் வைக்கிறது. அவரது ஆய்வுக் கட்டுரைகள் வரலாறு/கலை சார்ந்த இதழ்களில் வெளியாகியுள்ளன. பல்வேறு கல்லூரிகள், பல்கலைகள் மற்றும் அறக்கட்டளைகளின் ஆதரவும் இவரது ஆய்வுகளுக்குக் கிட்டியதுண்டு.

Click Here EnlargeClick Here Enlarge


மேலும் தகவலுக்கு: avenkatesan@ucdavis.edu

© TamilOnline.com