அக்டோபர் 11, 2014 அன்று மாலை சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS) கங்கை அமரன் அவர்களைச் சிறப்பு விருந்தினராகக் கொண்டு பிரபலமான லஷ்மன் ஸ்ருதி குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சியை லெமான்ட் கோவில் அரங்கத்தில் நடத்தியது. மாலதி, கிரிஷ், வேல்முருகன், ஹரிஹரசுதன், சாய்சரண், ரோஷனி, அனிதா, அனு ஆகிய பிரபல கலைஞர்கள் இதில் பாடினார்கள். தலைவர் திரு. சோமு துவக்கி வைத்துப் பேசினார். சங்கத்தின் இசைக் குழு நிர்வாகிகளான சோபா மற்றும் பிரேம் வரவேற்புரை வழங்கினர்.
டாக்டர் மணி சுப்ரமணியன் மற்றும் திரு. மணி ராஜேந்திரன், கங்கை அமரனுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். சங்கத் துணைத் தலைவர் திரு. சாக்ரடீஸ், மெல்லிசைக் குழுவின் நிறுவனர் லஷ்மன் அவர்களை அறிமுகப்படுத்தினார். சங்கத்தின் முன்னாள் தலைவி திருமதி. மாசிலாமணி மாணிக்கம், திரு.குப்புசாமி, முன்னாள் தலைவர் திரு. அறவாழி ஆகியோர் லஷ்மன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தினர்.
சங்கத்தினைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆதரித்து வரும் திரு. அசோக் லக்ஷ்மணன் (Professional Mortgage Solutions Inc.) அவர்களைச் செயலாளர் திரு. மணிகண்டன் மற்றும் பொருளாளர் திரு. பிரசாத் பாராட்டினர். கங்கை அமரன் சிறப்பு விருது வழங்கிக் கௌரவித்தார்.
சங்கத்தின் இசைக்குழு நிர்வாகி திரு. நம்பிராஜன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கெனச் சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டர்கள் தேவி அண்ணாமலை, சுஜாதா , பரத்வாஜ், சுவாமிநாதன் பாலசுப்ரமணியன், தங்கதுரை ராமச்சந்திரன் ஆகியோருக்கும், புகைப்படம் எடுத்த அருளொளி ராஜாராம் மற்றும் ராஜேஷ் சுந்தர்ராஜனுக்கும் நன்றி தெரிவிக்கபட்டது.
ஆனந்த் ஆனந்தன், சிகாகோ |