மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
2014 நவம்பர் 19 முதல் 28ம் தேதிவரை 'அம்மா' ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டெட்ராயிட்டுக்கும் வருகை தர இருக்கிறார். தெய்வீகத்தின் இருப்பிடமான அம்மாவை 'அரவணைக்கும் ஞானி' என்று அழைப்பர். அயராது சேவை செய்யும் அம்மா மக்களின் துயர்துடைக்கத் தமது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
சான் ரமோன், கலிஃபோர்னியா 11.19 - 11.22
டெட்ராயிட், மிச்சிகன் 11.24 - 11.28

இவ்விடங்களில் இலவசப் பொது நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக முகாம்கள் நடைபெறும். இலவச நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீக சொற்பொழிவுகள், தியானம், பஜனை நடைபெறும். ஆன்மீக முகாமில் (retreat), ஆன்மீக மற்றும் தியான வகுப்பு, சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

அம்மாவின் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.amritapuri.org/activity
மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com