நவம்பர் 15, 2014 அன்று மாலை ராமாயண காவியத்தை தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சுவாதித் திருநாள் போன்ற மஹான்களின் கீர்த்தனைகள் மூலமாக சங்கீதாலயா இசைப் பள்ளி (வாய்ப்பாட்டு), நாதநிதி இசைப் பள்ளி (வீணை), நாதோபாசனா கவின்கலைகள் பள்ளி (மிருதங்கம்) மூன்றும் இணைந்து 'சங்கீத ராமாயணம்' என்னும் இசைக்கோவையாக வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சி Robert Smithwick Theater (Foothill College, 12345 El Monte Road, Los Altos Hills, CA 94022) அரங்கில் நடைபெறும்.
சங்கீதாலயாவின் நிறுவனர் திருமதி ஹேமா சிஸ்டா, தமது குரு எம்.எல்.வி. பாணியைப் பின்பற்றுகிறார். துரிதமான பிருகாக்களும், கமகங்களும் நிறைந்த அவரது பயிற்சி முறையில் ரஸானுபாவமும் லயமும் வலியுறுத்தப்படுகிறது. நாதநிதியை நிறுவிய வீணை வித்வான் திரு ஸ்ரீகாந்த் சாரி, வயலின் மேதை லால்குடி ஜயராமனிடம் இசை நுட்பங்களைப் பயின்றவர். நாதோபாசனாவின் ரவீந்திர பாரதி ஸ்ரீதரன் தமது குரு நெய்வேலி நாராயணன் அவர்களின் தஞ்சாவூர் பாணியைப் பின்பற்றுகிறார். அவரது லய உணர்வும் காலப் பிரமாணமும் சிறப்பானவை.
சங்கட மோசன ஹனுமான் கோவிலுக்கு (Newark, CA) நிதி திரட்டவென நடக்கும் இந்த நிகழ்ச்சியின் வருவாய், கோவிலின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும். இந்தக் கோவில் பண்டித் கோவிந்த் ஸ்ரீனிவாசன் அவர்களால் நிறுவப்பட்டது.
நுழைவுச்சீட்டு: பொது - $25; சிறப்பு - $100
விவரங்களுக்கு: தொலைபேசி எண்கள்: 650.440.6407; 510.378.1770 மின்னஞ்சல்: webadmin@sangithalaya.com, govindis@yahoo.com வலைமனை: www.bayareahanumantemple.org
செய்திக்குறிப்பிலிருந்து |