டாலஸ்: தீபாவளிக் கொண்டாட்டம்
நவம்பர் 1, 2014 அன்று கோப்பல், செயின்ட் அல்ஃபான்ஸோ சைரோ மலபார் கத்தோலிக்க ஆலய வளாகத்தில், டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நாடகம், இலக்கியம் மற்றும் ஃபேஷன் ஷோவுடன் தீபாவளி கொண்டாடப்படுகிறது. மதுவந்தி அருண் மற்றும் குழுவினரின் 'சிவ சம்போ' நாடகத்துடன் மாலை 3.30க்கு விழா தொடங்கும். தொடர்ந்து பேரா. கு. ஞானசம்பந்தம் வழங்கும் 'திரையிசையில் இலக்கியம்' என்ற சிறப்புச் சொற்பொழிவு நடைபெறும். தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆடையலங்கார அணிவகுப்பும் விழாவில் இடம்பெறும். இந்தியப் பாரம்பரிய உடைகளில் மட்டும், தனியாக, குடும்பத்துடன், அப்பா-மகள், அம்மா-மகள், அம்மா-மகன், கணவன்-மனைவி என வெவ்வேறு பிரிவுகளில் அணிவகுப்பு நடைபெறும். சங்க உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம். உறுப்பினர் அல்லாதவர்களுக்கு $10 நுழைவுக்கட்டணம்.

சின்னமணி,
டாலஸ்

© TamilOnline.com