தெரியுமா?: டெக்ஸ்வேல்லி: ஜவுளித் துறையில் முதலீடு செய்ய அரிய வாய்ப்பு
உலக நெசவுத்துறையில் ஈரோடுக்குத் தனியிடம் உண்டு. பருத்திப் பொருட்கள் உற்பத்தியில் முன்னிலையில் உள்ள ஈரோடில் 7 முதல் 8 பில்லியன் யூ.எஸ். டாலர் மதிப்புள்ள நூல், வண்ணத் துணிகள், நவீன ஆடைகள் ஆகியவை உற்பத்தி ஆகின்றன.

இந்தியாவிலேயே முதன்முதலாக, இங்கு டெக்ஸ்வேல்லி (TexValley) என்ற B2B மையம் அமைக்கப்பட்டுள்ளது. 15 லட்சம் சதுர அடியில் அமைந்த இந்த வணிக மையம், அரசு, தனியார் துறை கைகோத்து (PPP), மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. CPCDS திட்டத்தின் கீழ் இதற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. ஈரோடின் இரு பெரிய தொழில் நிறுவனங்களான, லோட்டஸ் TVS மற்றும் URC கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் ஆகியவை இணைந்து கட்டிய இம்மையத்திற்கு, ஈரோடு டெக்ஸ்டைல் மால் லிமிடெட் என்பது பெயர். இங்குள்ள உலகத்தரம் வாய்ந்த வசதிகள், கடைகள் மற்றும் வேறு பிற அம்சங்கள், பெரிய தயாரிப்பு நிறுவனங்களையும் பிராண்டுகளையும் ஏற்கனவே கவர்ந்துள்ளது. டெக்ஸ்வேல்லி உலகின் முதன்மை ஜவுளி மையமாக உயரும் சாத்தியக்கூறு பிரகாசமாக உள்ளது.

மிகச் சரியான நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிநவீன வசதி, இப்பகுதியில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலும் இதற்குச் சாதகமாக உள்ளன.

அதுமட்டுமல்ல, தினசரி மற்றும் வாராந்திரச் சந்தைகள் முழுமூச்சுடன் செயல்பட வசதி கொண்டதாக இது திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டர், இதனை உலகப்புகழ் வாய்ந்த நெசவுத்தொழில் புத்தாக்க மையமாக்குவதில் பங்கு வகிக்கும்.

தெற்காசியாவிலேயே முதன்முதலாக இந்த அளவில், இத்தனை தொழில்நுட்பத்துடன் ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முற்காலத்தின் சில்க் ரூட் போன்று, இந்தியாவின் வட-தென் பகுதிகளின் நுழைவாயிலாக இப்பகுதி மாறும் சாத்தியக்கூறுகள் உள்ளன. பல நூறு கோடி முதலீடு பெற்றுள்ள இம்மையத்தில், வருடம் முழுவதும் சந்தைப்படுத்தல் நிகழ்வுகள் (marketing events) தொடர்ந்து நடைபெற உள்ளன. இதனால், இதில் இயங்கும் வணிக நிறுவனங்கள் சர்வதேச அளவில் தங்கள் பொருட்களை விற்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

டெக்ஸ்வேல்லி ஒரு முன்னோடி முயற்சி. மிகுந்த திறனும் சிறப்பான பின்புலமும் கொண்ட இப்பகுதியின் வணிகவியல் வரைபடத்தையே மாற்றியமைக்கும் முயற்சி. மத்திய ஜவுளித்துறையின் மேற்பார்வையுடன் நிர்மாணம் கண்டுள்ள இம்மையம், தெற்கு ஆசியாவின் துணி வியாபாரத்தில் ஒரு முழுமையான மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுவதில் நியாயம் உண்டு.

நீங்கள் டெக்ஸ்வேல்லி வணிகப் பெருவளாகத்தில் (TexValley Mall) முதலீடு செய்யலாம். வெகு காலத்திற்கு நல்ல வருமானம் ஈட்டும் வாய்ப்பை இது வழங்குகிறது.

முதலீடு செய்வது குறித்து அறிய:
மின்னஞ்சல்: enquiry@texvalley.info
தொலைபேசி: 732-666-0126(USA); 994-398-7090 (India)
வலைமனை: www.texValleyMarket.com

செய்திக்குறிப்பிலிருந்து
தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com