தெரியுமா?: விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் போட்டி-2015
விரிகுடாக் கலைக்கூடம் இரண்டாம் ஆண்டாகக் குழந்தைகளுக்கான திருக்குறள் போட்டியை 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தவுள்ளது.

போட்டிகள் 5 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்; 6 வயதிலிருந்து 10 வரை; 11 வயதிலிருந்து 15 வரை; 16 வயதிலிருந்து 20 வரை என்று நான்கு பிரிவுகளாக நடைபெறும். ஒரு திருக்குறளை முழுமையாகச் சொல்லி, அதன் பொருளைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில்சொன்னால் $1, பொருள் சொல்லாமல் குறள் மட்டும் சொன்னால் 50¢ என்ற வீதத்தில் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் குழந்தைகளுக்குப் பரிசுத்தொகையுடன் சான்றிதழும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் அளிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களுக்குப் பரிசுகள் உண்டு.

இந்தமுறை பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் விதமாகப் பெரியவர்களுக்கான திருக்குறள் போட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது. இவர்கள் தமக்குத் தெரிந்த குறள்களைப் பிழையின்றி ஒப்பிக்க வேண்டும். அந்தக் குறள்களிலிருந்து நடுவர்கள் கேட்கும் குறள்களுக்குப் பொருள் கூறவேண்டும். முதல் பத்து இடங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

'குழந்தைகளின் தூரிகையில் வள்ளுவன்' என்னும் ஓவியப் போட்டி நடைபெறும். போட்டியில் வெற்றிபெற்ற ஓவியம் திருக்குறள் விழாமலரில்,அட்டையை அலங்கரிப்பதோடு சிறப்புப் பரிசும் அளிக்கப்படும்.குழந்தைகளின் கருத்துக்களைத் தாங்கிய கட்டுரைகளும் திருக்குறள் மலரில் இடம்பெறும்.

போட்டி நாள்: ஃபிப்ரவரி 21, 2015
இடம்: Forest Park Elementary School, 34400 Maybird Circle, Fremont CA 94555.
நேரம்: காலை 8 முதல் மாலை 4 மணிவரை.
பரிசளிப்பு விழா நடைபெறும் இடம்: Logan High, Union City
நேரம்: மாலை 5 முதல் 9 மணிவரை.
பதிவுக் கட்டணம்: குழந்தைகள் (4 பிரிவினருக்கும்) - $5 / பெரியோர் - $15

திருமுடி துளசிராமன்

© TamilOnline.com