காய்கறி குருமா
தேவையான பொருட்கள்

வெங்காயம் - 1
காரட் - 1
தக்காளி - 2
பூண்டு - 3 பற்கள்
பாதாம் பருப்பு - 8
மஞ்சள் பொடி - 1/8 தேக்கரண்டி
இஞ்சி ஒரு அங்குல துண்டு - 1
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
கரம் மசலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
ஆல் ஸ்பைஸ் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பீன்ஸ், காரட், காலி·ப்ளவர், பட்டாணி - 2 கிண்ணம்
ஆலிவ் எண்ணெய் அல்லது வெண்ணெய் - 1 மேசைகரண்டி
பால் - 1 கிண்ணம்
கொத்துமல்லித் தழை - சிறிதளவு

செய்முறை

காய்கறி, எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் நன்கு மையாக அரைக்கவும். காய்கறியை நுண்ணலை யிலோ அல்லது குக்கரிலோ வேகவைத்துக் கொள்ளவும். ஆல் ஸ்பைஸ்

பொடி அமெரிக்க அங்காடிகளில் கிடைக்கும்.

அடிகனமான வாணலியில் வெண்ணெய் விட்டு, சற்றுக் காய்ந்து உருகியதும் அரைத்ததை அதில் போட்டு 15 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் இதில் வெந்த காய்கறியைச் சேர்த்து 10 நிமிடம்

மிதமான தீயில் வைக்கவும்.

கடைசியில் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழையைச் சேர்க்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com