பைனாப்பிள் கொத்சு
தேவையான பொருட்கள்
பைனாப்பிள் (சிறு துண்டுகள்) - 2 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 4
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி விதை - 1 தேக்கரண்டி
எள் - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு (விரும்பினால்)
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை
நெய் விட்டுப் பைனாப்பிளை நன்றாக வதக்கிக் கொள்ளவும். வாணலியில் கொத்துமல்லி விதை, தேங்காய்த்துருவலை எண்ணெய் விட்டு வதக்கவும். எள்ளை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்யவும். வறுத்த தனியா, தேங்காயை மிக்சியில் பொடி செய்யவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய் வற்றல் மிளகாய் தாளித்து வதக்கி வைத்துள்ள பைனாப்பிள் துண்டுகளைப் போட்டு, உப்பும் போட்டு நன்றாக வதக்கிப் பொடிகளையும் போட்டுச் சிறிது தண்ணீர் விட்டு ஒன்று சேரக் கொதிக்கும்போது வெல்லம் போடவும். கொதித்ததும் இறக்கிச் சாப்பிட்டால் சூப்பர்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி

© TamilOnline.com