உச்சுக் கொட்டிச் சாப்பிட கொத்சு
b>ஆரஞ்சு கொத்சு

தேவையான பொருட்கள்
ஆரஞ்சு (விதை நீக்கி) - 8
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி விதை - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
எள் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
வெல்லம் - சிறு கோலிக்குண்டு அளவு
எண்ணெய் - தாளிக்க
கடுகு - 1 தேக்கரண்டி

செய்முறை
வெறும் வாணலியில் எள்ளை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். தேங்காயைச் சிறிது வறுத்து, கொத்துமல்லி விதையையும் அத்துடன் வறுத்து மிக்சியில் பொடி செய்யவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பச்சை மிளகாய், மிளகாய் வற்றலையும் அத்துடன் தாளிக்கவும். ஆரஞ்சு சுளைகளைப் போட்டு உப்பு சேர்த்துச் சுருள வதக்கவும். நன்கு வெந்தவுடன் பொடித்த எள், தேங்காய், கொத்துமல்லி விதை இவற்றைப் போட்டு வெல்லமும் போடவும். கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொதிக்கவைத்து இறக்கவும். இது மிகவும் சுவையான கொத்சு. இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி

© TamilOnline.com