மாசசூஸட்ஸ்: சிவகாமியின் சபதம்
27 ஜுலை 2014 அன்று அமரர் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' காவியத்தை நாட்டிய நாடகம், திரு. மதுரை ஆர். முரளிதரன் இயக்கத்தில் மாசசூசட்ஸ், ஆண்டோவர் ரோஜர் அரங்கத்தில் விஷன் எய்டின் ஆதரவுடன் பிரமிக்கத்தக்க வகையில் மேடையேற்றப்பட்டது.

இந்த படைப்பில் முரளிதரன் அவர்களுடன் உள்ளூர் நடன ஆசிரியர்களான திருமதிகள் சுஜா மெய்யப்பன், ஜெயந்தி கட்ராஜு, ரஞ்சனி சைகல், கலைமங்கை சரவணன், அனந்தினி சந்திரசேகர், ஷீதல் துவாரகா, ஸ்ரீப்ரியா நடராஜன், பல்லவி நாகிஷா, ஹேமா ஐயங்கார், தீபா ராஜாமணி, மனு குன்னாலா மற்றும் ஹரிணி ராகவன் பங்கேற்றனர். இதில் இளம்மேதை செல்வி. காவ்யா முரளிதரனின் பங்கு அளவிட முடியாதது. இவருடன் சேர்ந்து செல்வியர் ஷ்ருதி ராஜு, ஷில்பா நாராயணன், வள்ளி முத்துக்கருப்பன், த்ரிஷா ககலவாடி, மேக்னா கந்தன், மெய்யா முத்து, அனன்யா வெங்கடேசன், சேதனா அய்யகாரி, ஜாஸ்‌வி தோகிப்பர்த்தீ, கார்த்தியாயினி மஹேந்திரகுமார், மேதா பல்நாட்டி, மோனிகா மாணிக்கம், நிகிதா மீனோச்சா, நேஹா பிள்ளை, நிஷா பிள்ளை, நிவேதிதா ரமேஷ், பூஜிதா ஜோன்னவித்துலா, ப்ரியா வெங்கடேஷ், ஷீரின் பக்ரே, ட்விஷா மொஹாபாத்ரா ஆகியோரும் பங்கேற்றனர். குழந்தைகளின் பெற்றோர்களும் சிறு வேடங்களில் மேடையேறியது அருமை.

விஷன் எய்ட் பார்வையற்றோர்களுக்கான சேவை நிறுவனம். ஒவ்வோராண்டும் புதுப்புது நிகழ்ச்சிகளை மேடையேற்றி அதன் வருவாயைப் பார்வையற்றோர் நலனுக்குப் பயன்படுத்துகிறார்கள். இதன் ஆலோசனைக் குழுத் தலைவர் பூரண் டாங், தலைமை விருந்தினர் கீதா ஐயர் அவர்களை அறிமுகப்படுத்தினார். இவர் 2014ம் ஆண்டுக்கான நியூ இங்கிலாந்தின் சிறந்த பெண்மணி ஆவார். உதவித் தலைவர் சையத் அலி ரிஸ்வி கலைஞர்களையும் தொண்டர்களையும் பாராட்டிப் பேசினார். அணியின் இணைநிறுவனர் மற்றும் துணைத்தலைவர் ரேவதி ராமகிருஷ்ணா நன்றியுரை கூறினார், விஷன் எய்டின் தலைவராக ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றிய அனு சித்ராபு அவர்களைப் பாராட்டிக் கேடயம் வழங்கப்பட்டது.

பமிலா வெங்கட்,
பாஸ்டன்

© TamilOnline.com