தக்காளி பொட்டுக்கடலை குருமா
தேவையான பொருட்கள்
தக்காளி (நறுக்கியது) - 2 கிண்ணம்
அல்லது பதப்படுத்திய நறுக்கிய தக்காளி - 1 டப்பா
பச்சை மிளகாய் - 5
அல்லது காரமிளகாய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
தேங்காய்த் துறுவல் - 1/2 கைப்பிடி
வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கிண்ணம்
பூண்டு - 3 பற்கள்
இஞ்சித் துண்டு - 1
வெங்காயம் (நறுக்கியது) - 1/4 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
ஆலிவ் எண்ணெய் அல்லது வெண்ணெய் - 1 மேசைகரண்டி
லவங்கப்பட்டை - சிறிய துண்டம்
பிரிஞ்சி இலை (bay leaf) - 1

செய்முறை

வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, லவங்கப்பட்டை, பெருஞ் சீரகம், பொட்டுக்கடலை மற்றும் தேங்காய்த் துறுவலை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சற்றுக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் தக்காளியைச் சேர்த்து வேகவிடவும். பின்னர் பிரிஞ்சி

இலையை சேர்க்கவும்.

அரைத்த விழுதைச் சிறிது தண்ணீர் சேர்த்துத் தளர்த்தி இதில் விட்டுச் சிறிது நேரம் கொதிக்கவிடவும். பின்னர் அடுப்பி லிருந்து இறக்கிப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழையைத் தூவவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com