பாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி
நவம்பர் 1, 2014 அன்று பாரதி தமிழ்ச் சங்கத்தின் வருடாந்திர தீபாவளிக் கொண்டாட்டம் ஃப்ரீமான்ட் நகரின் ஓலோனி கல்லூரி ஜாக்சன் அரங்கில் மதியம் 2 மணி முதல் நடைபெறும்.

தமிழர்களை இந்தியாவின் பிற மாநில, பிற மொழிபேசும் மக்களுடன் இணைத்து இந்திய தேசிய கலாசாரத் திருவிழாவாக இது கொண்டாடப்படும். இந்திய உபகண்டத்தின் வேற்றுமைகளில் ஒற்றுமையைப் பேணும் விதமாகத் தமிழரும் பிற மாநிலத்தவரும் தத்தம் கலைகளை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்யும் விழாவாக இந்த நிகழ்ச்சி அமையவிருக்கிறது

ஏராளமான குழந்தைகள், இளைஞர்கள் பங்கேற்கும் பரதம், கர்நாடக இசை, திரையிசை, சாஸ்திரிய, கிராமிய, திரையிசை நடனங்கள் இதில் இடம்பெறும். மோகினி ஆட்டம், குச்சுப்புடி, டாண்டியா, பாங்க்ரா போன்ற நடனங்களும், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்திப் பாடல்களும் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் கலை, கலசாரம் குறித்தும் அமெரிக்கா குறித்தும் சுவாரசியமான விநாடிவினா நிகழ்ச்சியும் உண்டு.

இந்தத் தேசிய ஒளிவிழாவில் பங்கேற்கவும், தகவல்களுக்கும்:
முரளி - 650.619.2380
கெளரி சேஷாத்ரி - 510.789.7809
மின்னஞ்சல்: batsvolunteers@gmail.com
வலையகம்: www.Bharatitamilsangam.org
முகநூல்: facebook.com/bharatitamilsangam

திருமலைராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com