பாரதி தமிழ் சங்கம்: யக்ன சேனி மஹாபாரத நாட்டிய நாடகம்
அக்டோபர் மாதம் 5, 2014 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் 'யக்ன சேனி - தீயில் உதித்த தேவதை' என்ற பிரம்மாண்டமான மகாபாரத நாட்டிய நாடகத்தை அளிக்கவிருக்கிறது. திரௌபதியின் பாத்திரத்தை மையமாகக் கொண்ட நாடகம் இது. சென்ற ஆண்டு 'சிவகாமியின் சபதம்' நாட்டிய நாடகத்தை வெற்றிகரமாக வழங்கிய கலைமாமணி மதுரை முரளீதரன் அவர்கள் இயக்கி, நாட்டியமணி தீபா மகாதேவன் குழுவினரோடு இதில் சேர்ந்து நடிக்கிறார்.

திரௌபதியின் பார்வையில் சொல்லப்படுவதாக இந்த மகாபாரத நாட்டிய நாடகம் அரங்கேறுகிறது. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்கும் இந்த நாடகம் முதன்முறையாக இப்பகுதியில் அரங்கேறுகிறது. அற்புதமான காட்சியமைப்புடனும் பிரமிக்க வைக்கும் மேடையமைப்புடனும் நாடகம் தயாராகி வருகிறது.

இந்த நாடகத்தின்மூலம் பெறப்படும் வருவாய் தமிழ் நாட்டின் புராதன கலைச் செல்வங்களை புனரமைக்கும் உன்னதமான பணிகளுக்குச் செல்லவிருக்கிறது. நிகழ்ச்சியைக் கண்டு களிப்போர் இந்தப் புனிதப் பணிக்கும் உதவுவதைப் பெருமையாகக் கருதலாம்.

நிகழ்ச்சிக்கான சீட்டுகளைப் பெற: http://www.bharatitamilsangam.org/BATS/

மேலதிகத் தகவல்களுக்கு:
தொலைபேசி: 925.307.6774
மின்னஞ்சல்: batsvolunteers@gmail.com
வலையகம்: www.Bharatitamilsangam.org
முகநூல்: facebook.com/bharatitamilsangam

திருமலைராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com