பருப்பு குருமா
தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 1/2 கிண்ணம்
கீரை (நறுக்கியது) - 1/2 கிண்ணம்
காரட், காலி·ப்ளவர், பீன்ஸ் (பொடியாக நறுக்கியது) - 1கிண்ணம்
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 2
இஞ்சித் துண்டு - 1
வெங்காயம் பொடியாக (நறுக்கியது) - 1/4 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லி - சிறிதளவு
ஆலிவ் எண்ணெய் அல்லது வெண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

தண்ணீர் விடாமல் காய்கறிகளை ஆவியிலோ அல்லது நுண்ணலையிலோ வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துவைத்துக் கொள்ளவும்.

பாசிப்பருப்பைக் கீரையுடன் சேர்த்துக் குக்கரில் வேகவிடவும். பருப்பு அதிகம் குழையாமல் வேகவிடவும். வாயகன்ற அடிகனமான வாணலியில், எண்ணெய் ஊற்றி, சற்றுக் காய்ந்ததும் அரைத்த
மசாலா விழுதைப் போட்டு நன்றாக வதக்கவும்.

பின்னர் வெந்த பருப்பு-கீரை கலவையைச் சேர்த்து, இதில் வெந்த காய்கறிகளையும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கியபின் கொத்தமல்லி இலைகளைத் தூவவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com