நீங்கள் சதுரங்கப் புலியா? இதோ, செஸ்கிட்ஸ் நேஷனுடன் இணைந்து மாதந்தோறும் உங்களுக்குச் சில புதிர்களைத் தருகிறோம். விடைகளை நீங்கள் 'Chess Tiger' என்ற தலைப்பிட்டு Thendral@TamilOnline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சரியான விடைக்குப் பரிசு உண்டு. ஒருவருக்கு மேல் சரியான விடை எழுதினால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒருவருக்குப் பரிசு தருவோம். சரியான விடைகளும், அவற்றை எழுதியவர்கள் பெயர்ப் பட்டியலும் அடுத்த மாதத் தென்றலில் வெளியாகும்.
புதிர் 5 | | | புதிர் 6 | |
White to Move - வெள்ளைக் காயை நகர்த்துக
Checkmate in Two - இரண்டு நகர்த்தலில் செக்மேட் செய்க
செப்டம்பர் மாதம் வெளியான புதிர்களின் விடை:
விடைகள்: புதிர் 3: Qxh7+ Qxh7, Nf7# புதிர் 4: Rh7 Ke8, Rc8#
இரண்டையும் சரியாக அனுப்பியவர்கள் பட்டியல் இதோ:
கார்த்திக் ஷங்கர், கவின் ஜெயவேல் குமரேசன், கௌதம் ஜெயசங்கரன், ஆதித் முத்துகுமார், ஷ்ரேயா ஸ்ரீதர், ஜேசன் செந்தில், செல்வத்தரசு தியாகராஜன், பிரணவ் செந்தில்குமார், விஸ்வா சுப்ரமணியன், சஞ்சித் சொக்கன்.
பரிசு பெறுபவர்: கார்த்திக் ஷங்கர்.
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்த்திக் ஷங்கர் க்குத் தனி மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளப்படும்
பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். |