முள்ளங்கி அடை
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 1 கிண்ணம்
பச்சரிசி - 1 கிண்ணம்
முள்ளங்கித் துருவல் 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
பயற்றம்பருப்பு - 1/4 கிண்ணம்
துவரம்பருப்பு - 1/4 கிண்ணம்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் வற்றல் - 2
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
அரிசிகளையும் பருப்புகளையும் தனித்தனியே ஊற வைக்கவும். அரிசியைக் களைந்து மிக்சியில் அரைக்கும்போது முள்ளங்கி, தேங்காய்த் துருவல், மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, பருப்புகளையும் சேர்த்து அரைக்கவும். அரிசியை நைசாகவும், பருப்புகளை கொஞ்சம் கொரகொரப்பாகவும் அரைத்து எடுத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி நறுக்கிப் போட்டு அடையாகத் தட்டவும். சூடாகச் சாப்பிட வெகு சுவையாக இருக்கும்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாடர், நியூ ஜெர்சி

© TamilOnline.com