மிச்சிகன்: TNF-MTS ஈகை விழா
டிசம்பர் 14, 2014 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை மிச்சிகன் கிளை, மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து ஈகை விழாவை நடத்தவுள்ளது. ஹூஸ்டன் சந்திரமௌலி எழுதி டெக்சஸ், பென்சில்வேனியா, நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களில் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்ட 'பஞ்ச தந்திரம்' முழுநீள நகைச்சுவை நாடகத்தை டாக்டர் வேங்கடேசன் குழுவினர் மிச்சிகனில் மேடையேற்ற உள்ளனர். வேங்கடேசன் கடந்த 30 ஆண்டுகளாகப் பல நாடகங்களை மேடையேற்றிய பெருமைக்குரியவர். பர்மிங்காம் சீஹோல்ம் பள்ளியில் நடைபெறவிருக்கும் இவ்விழாவில் திரட்டப்படும் நிதி, அறக்கட்டளையின் ABC பள்ளித்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தப் பயன்படுத்தப்படும் என்று மிச்சிகன் கிளையின் தலைவர் டாக்டர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அறக்கட்டளை இயக்குநர் லதா மணி, மேனாள் இயக்குநர் கீதா பிரதீப், தமிழ்ச் சங்கத் தலைவர் முருகப்பன் உட்படப் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு:
தொலைபேசி - மா.சுப்பிரமணியன் 248.737.5708
வலைமனை - tnfusa.org/chapters/Michigan

கீதா பிரதீப்,
டெட்ராய்ட், மிச்சிகன்

© TamilOnline.com